தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு: ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Published On 2024-03-04 07:48 GMT   |   Update On 2024-03-04 09:00 GMT
  • செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் எனவும் வழக்கு நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News