தமிழ்நாடு

ஓ.பி.எஸ். சொல்றாரே.... ஆங்... அப்படியா?

Update: 2023-06-10 08:26 GMT
  • தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய தஞ்சையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது” என்றனர்.
  • தன்னை பா.ஜனதா கைவிட்டு விட்ட விரக்தியில்தான் அவர் இவ்வாறு பா.ஜனதாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும், "தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய தஞ்சையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது" என்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "டி.டி.வி.தினகரனை 'தளபதி' என்று குறிப்பிட்டு 'நாமெல்லாம் ஒன்று சேர்ந்து அரசியல் கள மாடினால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் நம்மை எதிர்க்க எந்த கட்சியும் கிடையாது" என்றார்.

தன்னை பா.ஜனதா கைவிட்டு விட்ட விரக்தியில்தான் அவர் இவ்வாறு பா.ஜனதாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் பேசும் போது, 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரது சூழ்ச்சியால் நானும் நண்பர் ஓ.பி.எஸ்.சும் கனத்த இதயத்தோடு பிரிந்தோம். இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளோம். 30 ஆண்டுகளாக அம்மாவின் பிள்ளைகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் சிலரது பேராசையால், பணத்திமிரால் இன்று பிரிந்து கிடக்கிறார்கள் என்று உள்ளத்தை தொட்டு பேசினார். தொண்டர்களும் வடிவேல் பாணியில் "ஆங்.... அப்படியா...?" என்பது போல் பேசிக் கொண்டனர்.

Tags:    

Similar News