தமிழ்நாடு செய்திகள்
போக்குவரத்து கழகங்களில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- தி.மு.க. அரசு செய்தாலே, ஐந்து லட்சம் குடும்பங்களின் வாழ் வாதாரம் மேலோங்கும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்பி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை தி.மு.க. அரசு செய்தாலே, ஐந்து லட்சம் குடும்பங்களின் வாழ் வாதாரம் மேலோங்கும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.