தமிழ்நாடு செய்திகள்
மீஞ்சூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி
- பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்பட வில்லை.
- பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பொன்னேரி நெடுஞ்சாலை எல்.என்.ஜி. கல்லூரி அருகே சாலையின் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்பட வில்லை.
இதனால் அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பள்ளத்தில் சிக்கியது.
அருகிலுள்ள டிரான்ஸ் பார்மரில் மோதாமல் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இப்பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.