தமிழ்நாடு

டைடல் பூங்காக்கள் மூலம் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு- மு.க.ஸ்டாலின்

Published On 2022-06-24 06:00 GMT   |   Update On 2022-06-24 10:05 GMT
  • தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.
  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை தரமணியில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் விழுப்புரம், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தரமணி டைடல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தையும், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் சிப்காட்டில் தொழில் புத்தாக்க மையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு என்ற கணக்கெடுப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும். புதிய டைடல் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். உற்பத்தியில் தெற்காசிய அளவிலேயே தமிழகம் சிறந்த இடத்தை அடைந்துள்ளது.

2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News