தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த் மரணம் எனக்கு மிகப்பெரிய இழப்பு - உதயநிதி

Published On 2024-01-19 12:45 IST   |   Update On 2024-01-19 12:45:00 IST
  • நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
  • கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.

சென்னை :

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

கே : விஜயகாந்தின் மரணம்...

ப : மிகப்பெரிய இழப்பு. நல்ல மனிதர். நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.

கே : அரசியல் ரீதியா தே.மு.தி.க போராட்டங்களையும் அறிவித்துள்ளது...

ப : அது அவங்களுடைய விருப்பம். நாம் செய்ய வேண்டிய பணியை செய்து உள்ளோம். அரசியல் ரீதியா சந்திப்போம்.

Tags:    

Similar News