தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் கொண்டு வரப்படும்: அமைச்சர் காந்தி

Published On 2023-11-17 07:31 GMT   |   Update On 2023-11-17 07:31 GMT
  • கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
  • ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கோவை:

கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடந்தது.

ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

கடந்தாண்டு முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. தற்போது 2-வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கோவையில் 2-வது கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிட போகின்றோம். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மில்லியன் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மத்திய, மாநில அரசின் ஜவுளித்துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News