தமிழ்நாடு செய்திகள்

துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு வழங்க கோரிக்கை அதிகரிப்பு

Published On 2023-07-04 11:37 IST   |   Update On 2023-07-04 11:37:00 IST
  • தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது.
  • தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. மூத்த அமைச்சர்கள் சிலர் உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் இது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை.

தி.மு.க. மூத்த அமைச்சர்கள் விரும்பினாலும் தனக்கு அந்த பொறுப்பை ஏற்க விருப்பம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு அதுபற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல எழுந்து வருகிறது. தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

இந்த தடவையும் உதயநிதி இதை எப்படி எதிர் கொள்வார் என்று தெரிய வில்லை. ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்று விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News