தமிழ்நாடு

ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2023-07-12 09:55 GMT   |   Update On 2023-07-12 09:55 GMT
  • மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பணிக்கான ஒரு மறுநியமனத் தேர்வை ரத்து செய்யவும், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 என்பதை நீக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவச்செல்வங்களின் கல்வி, வருங்கால முன்னேற்றம் அதன் மூலம் மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தமிழக அரசு, 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியின்றி தவிக்கும் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News