தமிழ்நாடு செய்திகள்

பாஜகவில் இருந்து விலகியதற்கு அண்ணாமலையே காரணம்- காயத்ரி ரகுராம்

Published On 2023-01-03 08:47 IST   |   Update On 2023-01-03 09:13:00 IST
  • அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
  • நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன்.

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை.

உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.

அனைத்து ஆதாரங்களை சமர்பித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

Tags:    

Similar News