தமிழ்நாடு
- அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
- அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி என கூறினார்.
பொதுச்செயலாளர் ஆனதன் மூலம், அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது.
முன்னதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.