தமிழ்நாடு

கூட்டணி கதவை யாருக்காக திறந்து வைத்துள்ளார் என்பது அண்ணாமலைக்கே வெளிச்சம்

Published On 2024-01-13 07:58 GMT   |   Update On 2024-01-13 08:38 GMT
  • எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.
  • தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது.

திண்டுக்கல்:

அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் நடந்த ஒருவிழாவில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயககூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம் என பேசி உள்ளார். அது நிச்சயமாக அ.தி.மு.க.வுக்காக இல்லை.

எந்த கட்சிக்காக கூட்டணி கதவை திறந்துவைத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை உறுதியாக தெரிவித்துவிட்டார். இதற்குமேலும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.

காமராஜருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிட்டு பேசியுள்ளார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதனால் எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.


தி.மு.க.வில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும். அயோத்தி ராமர்கோவில் விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு வந்தது உண்மை. இதில் கலந்து கொள்வது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தி.மு..கவுக்கும், பா.ஜ.கவுக்கும் தான் நேரடி போட்டி உள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது. மக்களவை தேர்தல் மட்டுமல்ல. எந்த தேர்தல் நடந்தாலும் அது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News