தமிழ்நாடு செய்திகள்

தலைமை செயலகம் எதிரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-03-23 12:58 IST   |   Update On 2023-03-23 12:58:00 IST
  • எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்டவர்கள் நெற்றியில் கருப்பு துணி அணிந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
  • மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியலால் தலைமை செயலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை:

ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென அவையில் இருந்து வெளியேறினார்கள். சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வெளியேறிய அவர்கள் தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்டவர்கள் நெற்றியில் கருப்பு துணி அணிந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியலால் தலைமை செயலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News