தமிழ்நாடு செய்திகள்
செங்கல்பட்டு அருகே 2 மகன்களுடன் தம்பதி மாயம்
- நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், ராதா நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது49). இவரது மனைவி வசுமதி (35) இவர்களது மகன்கள் அஜித்குமார் (13), மித்தேஷ் (10). நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.
அவர்களது வீடு திறந்து கிடக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசுமதியின் அண்ணன் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.