தமிழ்நாடு செய்திகள்

பா.ஜனதா அரசால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மையை அண்ணாமலையால் கூறமுடியுமா?- கே.எஸ்.அழகிரி கேள்வி

Published On 2022-06-05 12:42 IST   |   Update On 2022-06-05 12:42:00 IST
  • பாரதிய ஜனதா கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
  • அண்ணாமலை தமிழகத்திற்கு பாரதிய ஜனதா அரசால் என்ன நன்மை கிடைத்தது, என்று கூற முடியுமா?

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்., அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம். தமிழை செம்மொழியாக அறிவித்தது. மேலும் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அதிகமாக அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் என இது போன்ற ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.

அனைத்திற்கும் புள்ளி விபரம் கூறும் அண்ணாமலை தமிழகத்திற்கு பாரதிய ஜனதா அரசால் என்ன நன்மை கிடைத்தது, என்று கூற முடியுமா? மோடி அரசால் தமிழகம் இதுவரை என்ன நன்மைகள் அடைந்து இருக்கிறது? அல்லது எந்த நன்மையை அடையப் போகிறது? அண்ணாமலை கூறட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News