தமிழகத்தில் 1300 இடங்களில் பா.ஜனதா பொங்கல் விழா
- சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர்.
- வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், கரு.நாகராஜன் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லி தலைமை வகுத்து கொடுத்த செயல்திட்டங்களை செயல்படுத்திய விபரம் பற்றி விவாதித்தனர்.
மேலும் தொகுதி வாரியாக நிலவும் பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர். வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் பாரம்பரிய விழாவை விவசாய அணி, மகளிர் அணியினர் மண்டல் வாரியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இதில் அந்த பகுதியில் உள்ள சமுதாய பெரியோர்களை அழைத்து கவுரவப்படுத்துதல், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.