தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பா.ஜ.க. அலுவலகங்களில் இன்று மாலை அஞ்சலி- அண்ணாமலை அறிவிப்பு

Published On 2022-12-30 10:28 IST   |   Update On 2022-12-30 13:11:00 IST
  • பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
  • சென்னையில் அனைத்து மண்டங்களிலும் ஹீரா பென்னின் உருவப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களிலும் பல்வேறு இடங்களிலும் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் மாலை 6 மணி வரை அஞ்சலியும், இரங்கல் கூட்டமும் நடைபெறுகிறது.

பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னையில் அனைத்து மண்டங்களிலும் ஹீரா பென்னின் உருவப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

Tags:    

Similar News