தமிழ்நாடு செய்திகள்

குமாரபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி

Published On 2023-10-28 15:18 IST   |   Update On 2023-10-28 15:18:00 IST
  • புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
  • பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பதால் போதுமான வகுப்பறைகள் இல்லாத நிலையில் பள்ளி மேலாண்மை குழு, ஊர் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

பின்னர் பள்ளியை ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி, மாணவர்களின் கல்வியை கவனத்தில் கொண்டு குமாரபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.


 அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரேம்குமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் உட்பட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News