தமிழ்நாடு

ஊட்டியில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் யோகிபாபு

Published On 2023-08-15 10:18 GMT   |   Update On 2023-08-15 10:18 GMT
  • தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
  • நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஊட்டி:

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் பசுமை நிறைந்தும், இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென்னிந்திய அளவில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக நீலகிரி உள்ளது.

இங்கு தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.

குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலவி வரும் சிதோஷ்ண நிலையும், இங்குள்ள இயற்கை காட்சிகளுக்காகவே அதிகளவிலான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சூட்டிடங் மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சார்லி, நடிககைள் வாணி போஜன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் சட்னி, சாம்பார் என்ற இணைய தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேற்று காலை தேவர்சோலை பகுதியில் நடிகர் யோகிபாபு நடித்து வரும் வெப்சீரிஸ் படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

தங்கள் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்ததை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் சினிமா படப்பிடிப்பை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபு ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார்.

இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து படப்பிடிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், சட்னி, சாம்பார் என்ற தலைப்பில் நடிகர்கள் யோகி பாபு, சார்லி, நடிகைகள் வாணிபோஜன், சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்த வெப் சீரிஸ் தொடருக்கான படப்பிடிப்பு நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இந்தத் தொடரை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார் என்றனர்.

Tags:    

Similar News