தமிழ்நாடு செய்திகள்

நெட் தீர்ந்ததால் பப்ஜி, ப்ரீபயர் கேம் விளையாட முடியவில்லை: 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2023-03-27 13:26 IST   |   Update On 2023-03-27 13:26:00 IST
  • குகன் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார்.
  • வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரை சேர்ந்த சுசிகரன்-வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் (வயது 13) .

சுசிகரன் பெட்டிக்கடை வைத்துள்ளார். குகன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

குகன் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று 2 செல்போன்களிலும் நெட் இணைப்பு தீர்ந்ததால் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News