தமிழ்நாடு செய்திகள்
"தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியீடு.
- சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப்பகிர்வை பற்றி எடுத்துரைக்கும்.
மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்தும்.
பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக மகளிர் கொள்கை 2024 .
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப்பகிர்வை பற்றி எடுத்துரைக்கும் மகளிர் கொள்கை 2024.