தமிழ்நாடு

வலைதளத்தில் தேடி கரூர் தொழிலதிபரிடம் நாய் குட்டியை வாங்கிய ராகுல் காந்தி

Published On 2023-08-24 03:58 GMT   |   Update On 2023-08-24 04:02 GMT
  • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
  • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

கரூர்:

கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

Tags:    

Similar News