தமிழ்நாடு செய்திகள்

100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்ட காட்சி.

நெல்லை அருகே திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசம்- பங்கில் குவிந்த மக்கள்

Published On 2023-02-26 12:46 IST   |   Update On 2023-02-26 12:46:00 IST
  • 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
  • திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை சுத்தமல்லி பங்கில் 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் அங்கு திரண்டு வந்து திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சார்பில் ரூ.100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் செய்திருந்தார்.

உலக பொதுமறையை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

Tags:    

Similar News