தமிழ்நாடு

பரனூர் டோல்கேட் முன்பு சுங்கவரி வசூலை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-09 06:57 GMT   |   Update On 2023-09-09 06:57 GMT
  • சுங்கவரி கட்டணத்தால் ஏழை எளிய வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
  • தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பரனூர் டோல்கேட் முன்பு நடைபெற்றது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட் 2005-ம் ஆண்டு சுங்கவரி கட்டண வசூலை தொடங்கும்போது காருக்கு ரூபாய் 20, பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 55, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 75 என்று சுங்க கட்டணம் வசூலித்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து 2023-ம் ஆண்டு காருக்கு ரூபாய் 70, பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 230, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 375 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை விலை உயருகிறது. சுங்கவரி கட்டணத்தால் ஏழை எளிய வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். பரனூர் டோல்கேட் 2019-ம் ஆண்டு காலாவதி ஆகி விட்டதாக கூறுகின்றனர்.

தற்போது வரை பரனூர் டோல்கேட்டில் சுங்கவரி கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் மற்றும் 2019 -ம் ஆண்டு காலாவதியான டோல்கேட்டை இழுத்து மூட வலியுறுத்தியும் செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பரனூர் டோல்கேட் முன்பு நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் லயன் நாகராஜ், நகர செயலாளர்கள் முருகன், விஜயக்குமார், ஜெயபால், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் செழியன், ஒன்றிய நிர்வாகிகள் கோபிநாத், கஸ்தூரி, சக்திவேல், பாண்டியன், ராஜ்குமாரன், எம்.ஜி.மூர்த்தி, ரமேஷ் பிரபாகரன், பொன்னுசாமி, சந்திரகாந்தன், சேஷாத்ரி, பம்மல் ராஜ், யுவராஜ், பன்ரொட்டி சுரேஷ், ஞானப்பால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News