தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2¾ கோடி வருவாய்

Published On 2023-08-26 04:24 GMT   |   Update On 2023-08-26 04:24 GMT
  • கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
  • உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது.

பழனி:

பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்றும் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 826 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கத்திலான பொருட்கள் 925 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 கிலோ 162 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Tags:    

Similar News