தமிழ்நாடு செய்திகள்
ஸ்டெர்லைட் வழக்கு- வரும் 20ம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்தி வைப்பு
- வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு.
- கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.