தமிழ்நாடு

கள்ளழகர் திருவிழாவுக்கு வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Published On 2024-04-22 05:07 GMT   |   Update On 2024-04-22 05:08 GMT
  • சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது.

கூடலூர்:

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அந்த தண்ணீர் மதுரையை வந்தடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 272 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் 58.07 அடியாக குறைந்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. அணைக்கு 209 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News