தமிழ்நாடு செய்திகள்
வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.