தமிழ்நாடு

தமிழகம் வழியாக தெலுங்கானா-கேரளா இடையே புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2022-12-25 05:39 GMT   |   Update On 2022-12-25 05:39 GMT
  • ஐதராபாத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 31-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு கோட்டயம் சென்று சேரும்.
  • சிறப்பு ரெயில்கள் அனைத்தும் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை:

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் வழியாக தெலுங்கானா-கேரளா இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஐதராபாத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 31-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு கோட்டயம் சென்று சேரும். மறுமார்க்கமாக வருகிற 31-ந்தேதி இரவு 10.50 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு ஜனவரி 1-ந்தேதி இரவு 9.15 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

இதேபோல் நர்சாபூரில் இருந்து வருகிற 27-ந்தேதி காலை 11.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் கேரள மாநிலம் கண்ணூருக்கு வருகிற 28-ந்தேதி மாலை 5.15 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக வருகிற 28-ந் தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு 30-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு நர்சாபூர் சென்றடையும்.

ஜெகந்திராபாத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி இரவு 7 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 29-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு 31-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு ஜெகந்திராபாத் சென்றடையும்.

நர்சாபூரில் இருந்து வருகிற 31-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், ஜனவரி 1-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூர் சென்று சேரும். மறுமார்க்கமாக ஜனவரி 1-ந்தேதி இரவு 10.55 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு 2-ந்தேதி இரவு 11.45 மணிக்கு நர்சாபூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News