தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு

Published On 2023-12-23 12:06 GMT   |   Update On 2023-12-23 12:06 GMT
  • வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1500 கோடி வரை வழங்கப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
  • வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இந்த வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் தோறும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News