தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 346 கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 486 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 கனஅடியாக சரிந்துள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 500 கனஅடியாக நீடிக்கிறது.
அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 486 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 101.89 அடியாக இருந்த அணை யின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 101.79 அடியாக குறைந்தது.