தமிழ்நாடு

டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Update: 2023-05-31 08:50 GMT
  • தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
  • பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தென்காசி:

தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது.

நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.

இதுகுறித்து பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News