தமிழ்நாடு

பிரதமர் மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார்- பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2024-04-04 10:38 GMT   |   Update On 2024-04-04 10:38 GMT
  • கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது.
  • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.

கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.

அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News