திருவள்ளூரில் விடிய விடிய பலத்த மழை: ஊத்துக்கோட்டையில் 6 செ.மீட்டர் பதிவு
- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- நேற்று இரவும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பலத்த மழை கொட்டியது.
இந்தநிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது. ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது.
இதேபோல் ஆர்.கே.பேட்டை, ஆவடி, தாமரைப்பாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 6.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர் வேண்பாக்கம், சோழவரம், பழவேற்காடு, தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக இரவு 9 மணி முதல் 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-
திருத்தணி- 59 மி.மீட்டர்
பொன்னேரி- 36 மி.மீட்டர்
ஆர்.கே. பேட்டை - 33 மி.மீட்டர்
திருவள்ளூர் - 27 மி.மீட்டர்
திருவாலங்காடு - 21 மி.மீட்டர்
ஆவடி - 19 மி.மீட்டர்
தாமரைப்பாக்கம் - 17 மி.மீட்டர்
கும்மிடிப்பூண்டி - 16 மி.மீட்டர்
சோழவரம் -16 மி.மீட்டர்
பள்ளிப்பட்டு - 10 மி.மீட்டர்
செங்குன்றம் - 6 மி.மீட்டர்
பூண்டி - 2 மி.மீட்டர்.