தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை- திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவு

Published On 2022-07-01 06:13 GMT   |   Update On 2022-07-01 06:13 GMT
  • பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
  • திருவள்ளூர் பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை கொட்டியது.

திருவள்ளூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டியது. பின்னர் இந்த மழை விடிய விடிய சாரல் மழையாக நீடித்தது.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில் அதிக பட்சமாக 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை கொட்டியது.

பலத்த மழை காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மீ.மீட்டரில்) வருமாறு:-

திருவள்ளூர் - 36

பூண்டி - 17

பொன்னேரி - 16

ஜமீன் கொரட்டூர் - 16

சோழவரம் - 9

புழல் - 9

தாமரைப்பாக்கம் - 8

கும்மிடிப்பூண்டி - 7

பள்ளிப்பட்டு - 7

திருவாலங்காடு - 6

திருத்தணி - 5

பூந்தமல்லி - 4

ஆர்.கே.பேட்டை- 2

Tags:    

Similar News