தமிழ்நாடு செய்திகள்

42 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2024-10-15 15:34 IST   |   Update On 2024-10-15 15:34:00 IST
  • அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
  • சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.

சென்னை:

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.

42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.

அக்டோபர் 1 முதல் தற்போது வரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News