தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் 550 ஆசிரியர்களின் பட்டியல் ஒப்படைப்பு

Published On 2023-01-26 09:31 IST   |   Update On 2023-01-26 09:31:00 IST
  • வாக்களிக்க வசதியாக 1,400 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் 52 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
  • வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளா்கள் உள்ளனா்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,400 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் 52 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று அன்று மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து பிற தொகுதியான பவானி, பெருந்துறை, கோபி பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர் என 550 பேர் ஈடுபட உள்ளனர்.

இதற்கான பட்டியல் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் வாக்குச்சவாடி அலுவலர் நிலை 1, நிலை 2 என்ற பொறுப்பில் ஈடுபடுவார்கள் எனவும், இவர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பணி குறித்து பயிற்சி 3 நிலைகளில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News