தமிழ்நாடு செய்திகள்

யானைகள் மிதித்து சேதப்படுத்திய சுற்றுச்சுவர்.

பவர் கிரிட் அலுவலக சுவரை உடைத்து யானைகள் அட்டகாசம்

Published On 2022-12-25 13:38 IST   |   Update On 2022-12-25 13:38:00 IST
  • பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
  • பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோணங்கி அள்ளி, சின்னபங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய் ஆகிய கிராமங்கள் வழியாக சோம்பட்டி பகுதியில் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.

பின்னர் அதன் அருகே அமைந்துள்ள சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News