தமிழ்நாடு

பொன்னேரி அருகே ஏரி இடத்தை ஆக்கிரமித்து மின்வேலி: கிராம மக்கள் மறியல்

Published On 2023-10-04 09:08 GMT   |   Update On 2023-10-04 09:08 GMT
  • கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஏரி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் மின்வேலி அமைத்து உள்ளனர். மேலும் அதில் நெற்பயிரிட இருப்பதாக தெரிகிறது.

மின்வேலியால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் ஆக்கிரமிப்பு ஏரிநிலத்தை மீட்க கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மதியழகன், ஏரி இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்

Tags:    

Similar News