தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது எடுத்த படம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

Published On 2024-04-13 03:59 GMT   |   Update On 2024-04-13 03:59 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.
  • தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அங்கு அவர் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரட்டுமலை சோதனை சாவடி பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் காரை செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ஜான்பாண்டியன் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News