தமிழ்நாடு

மார்ச் 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2024-03-18 14:35 GMT   |   Update On 2024-03-18 14:35 GMT
  • மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.

பெரும்பாலான கட்சிகள் தங்களின் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில், பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுக வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 24ம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 26ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், அன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மார்ச் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியிலும், இரவு 7 மணிக்கு தென்காசி (தனி), 28ம் தேதி விருதுநகர், ராமநாதபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

தொடர்ந்து, 29ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News