தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் உத்தரவு

Published On 2023-01-19 17:50 IST   |   Update On 2023-01-19 17:50:00 IST
  • பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
  • சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை:

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல்தளத்தில் வசித்து வந்த ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News