மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தை கடல் நீர் சூழ்ந்தது. 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்புவதால் மீனவ கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெருங்கி வரும் மாண்டஸ் புயலால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் உள்ள பாரதி பூங்கா, படகு குழாம் மூடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. கடலூர் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென்கிழக்கே தீவிரப்புயலாக வங்கக்கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.