தமிழ்நாடு செய்திகள்

வந்தே பாரத் ரெயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம்- ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-27 15:58 IST   |   Update On 2023-10-27 15:58:00 IST
  • வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கியது.
  • மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க எதிர்ப்பு.

வந்தே பாரத் ரெயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்?

மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐ.சி.எப் இலவசமாக வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News