தமிழ்நாடு

50 ஆயிரம் பேரை திரட்டணுமா?- அதிர்ந்து போன காங்கிரசார்

Update: 2022-08-13 09:48 GMT
  • காங்கிரஸ் பாத யாத்திரை அடுத்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்குகிறது
  • தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் தொண்டர்களை திரட்டுங்கள் என்று வேணுகோபால் கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக எத்தனையோ வியூகங்களை வகுத்து பார்த்தாலும் பருப்பு ஒன்றும் வேகவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முணுமுணுத்தபடி உள்ளனர். அதற்காக மூலையில் சும்மா போய் உட்கார்ந்து விட முடியுமா? ஏதாவது அதிரடி செய்ய வேண்டுமே. இதை கருத்தில் கொண்டு நாடு தழுவிய பாத யாத்திரைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த பாத யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பாத யாத்திரைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கி நடத்த உள்ளார். எனவே பாதயாத்திரையை பிரமாண்டமாக மாற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராகுல் பின்னால் மிகப்பெரிய பட்டாளம் அணிவகுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அகில இந்திய அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது.

பாத யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்துதான் தொடங்கப் போகிறோம். 3 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை நடக்கிறார். அவர் போகும் வழி நெடுக 50 ஆயிரம் பேரை திரட்டி வரவேற்க வேண்டும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் தொண்டர்களை திரட்டுங்கள் என்று வேணுகோபால் கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.

50 ஆயிரம் பேர் என்றதும் தமிழக தென் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News