தமிழ்நாடு செய்திகள்

வளர்ச்சி பணிகள் குறித்து 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2023-10-18 10:02 IST   |   Update On 2023-10-18 10:03:00 IST
  • காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

செங்கல்பட்டு:

மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றார். அப்படி செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிலையில் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஆய்வு கூட்டத்தில் 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News