தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-15 17:23 IST   |   Update On 2023-07-15 17:42:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.
  • விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மதுரை புது நத்தம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.

தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நாளிதழ் சேமிப்பு இடம், நூல் கட்டும் இடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகம் 6 தளங்கள் கொண்டு கட்டப்பட்டு இருப்பதால் லிப்ட் வசதியும் உள்ளது.

தரைதளத்தில் அழகிய கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

கூட்ட அரங்கம், முக்கிய பிரமுகர்களின் அறை, சொந்த நூல்களை எடுத்து வந்து படிக்கும் பிரிவு உள்ளது.

முதல் தளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூல்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

2ம் தளம் முழுவதும் தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன.

3ம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளன.

4ம் தளத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

5ம் தளத்தில் மின் நூலகம், பல்லூடக பிரிவு நூல் பாதுகாப்பு பிரிவு, ஒளிப்பதிவு கூடம் உள்ளன.

6வது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நிர்வாகப் பிரிவு, பணியாளர்கள் உணவு அருந்தும் இடம் அமைந்துள்ளன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் பங்றே்றுள்ளனர்.

Tags:    

Similar News