தமிழ்நாடு

மேற்கு மாம்பலத்தில் மூடப்பட்ட தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-03-29 09:50 GMT   |   Update On 2024-03-29 09:50 GMT
  • இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
  • மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் "மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு குண்டு வைத்து உள்ளேன், சிறிது நேரத்தில் வெடிக்கும்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுபற்றி உடனடியாக அசோக் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இந்த பள்ளி கடந்த 2021-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News