தமிழ்நாடு

மதுரையில் உணவில் பிளேடு துண்டு- ஓட்டலுக்கு நோட்டீஸ்

Published On 2023-06-18 08:07 GMT   |   Update On 2023-06-18 08:07 GMT
  • முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
  • வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

மதுரை:

மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.

மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News