தமிழ்நாடு

தமிழகத்தில் பஸ் நிறுத்தங்களில் பஸ்களின் வருகை, புறப்பாடு தகவலை செல்போனில் பார்க்கலாம்

Published On 2023-07-08 07:44 GMT   |   Update On 2023-07-08 07:44 GMT
  • பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
  • பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்ப டும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.

இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News